கேரளாவில் பள்ளி மாணவியை கடத்திய 3 பேர் புளியரையில் கைது
1 min read
3 people who kidnapped a schoolgirl in Kerala arrested in Puliyarai
5.12.2023
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பள்ளி மாணவியை கடத்தி அவரது பெற்றோர்களிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய மூன்று பேர் கொண்ட கும்பலை தமிழக எல்லையான புளியரை பகுதியில் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஒயூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி இவரது மனைவி சிஜி இவர்களுக்கு ஜோனாதன் (வயது 10) என்ற மகனும் அபிகேல் சாரா (வயது 6) என்ற மகளும் உள்ளனர் கடந்த 27 ஆம் தேதி மாலை நாலு முப்பது மணிக்கு ஜோனாதன்-அபிகேல் சாராவும் வீட்டுக்கு அருகே டியூசன் படிக்க இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் அபிகேல் சாராவை கடத்திச் சென்றது.
பட்டப் பகலில் நடைபெற்ற இந்தக் கடத்தல் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது இபின்னர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சிறுமியின் தாய்க்கு போன் செய்து ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
உடனடியாக அபிகேல் சாராவின் பெற்றோர் கொல்லம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இது பற்றி கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர் கேரளா முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் கடத்தல் கும்பலுக்கு பணம் தர முன்வராத நிலையில் கொல்லம் போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருவதை அறிந்த கடத்தல் கும்பல் மறுநாள் மதியம் அபிகேல் சாராவை கொல்லம் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அவரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
அதனைத் தொடர்ந்து அபி கேர்ள் சாராவை மீட்ட போலீசார் அவரை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். ஆனாலும் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் சிறுமியை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் கொல்லத்திலிருந்து தமிழக எல்லையான புளியரை வழியாக தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் கேரளா போலீசார் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா தமிழக எல்லையான புளியரை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து அவர்களிடத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள்
விசாரணையில் அவர்களுக்கு கொல்லம் சிறுமி அபிகேல் சாரா கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் கொல்லம் அருகே உள்ள சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த பத்மகுமார் (வயது 52) அவரது மனைவி அனிதா (வயது50) மற்றும் அவரது மகள் அனுபமா என்பது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் போலீசார் விசாரணைக்காக அடூர் ஆயுதப்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் ஏடிஜிபி அஜித்குமார் மற்றும் டிஐஜி நிஷாந்தினி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மூவரையும் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.