June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் மழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

1 min read

Rain in Tirunelveli – water entered houses

9.12.2023
திருநெல்வேலியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மாநகராட்சியில் மழை நீர் தேங்கியது. மேலப்பாளையம் பகுதியில் சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பல மணி நேரம் நீடித்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலப்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறம் தாழ்வான பகுதிகளில் உள்ள சில குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் மின்சாதன பொருட்கள் மற்றும் தேவையான பொருள்களை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தினர்.
மோட்டார் மூலம் அப்பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேபோன்று வண்ணாரப்பேட்டை சாலையில் தொடர் மழை காரணமாக கழிவு நீர் வெளியேறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *