காங்கிரஸ் மீது பாஜக மகளிர் அணி தலைவி பரபரப்பு புகார்- தென்காசியில் பேட்டி
1 min read
BJP women’s team leader complains about Congress – interview in Tenkasi
12.12.2023
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி உமாபதி பத்திரிகையாளர் களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியினர் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு எந்தவித முயற்சியும் இதுவரை எடுத்தது கிடையாது. ஆனால் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர் என்பது காங்கிரஸ் மேலவை உறுப்பினரான தீரஜ் ஷாகுவின் இல்லத்தில் இருந்து ரூபாய் 350 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதிலிருந்து தெரியவந்துள்ளது ஆனால் இந்தியா கூட்டணி என கூறிக்கொள்ளும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இது குறித்து மௌனம் சாதிப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத ஒருவரை தொடர்ந்து மூன்று முறை மேலவை உறுப்பினராக காங்கிரஸ் கொண்டு வருவதில் இருந்தே அவருக்கும் காங்கிரஸ் கட்சியின் மேல் இடத்திற்கும் தொடர்பு உள்ளதை காட்டுகிறது. மேலும் மம்தாவின் அமைச்சர் வீட்டில் இருந்து 50 கோடி ரொக்க பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 113 தங்க நாணயங்கள் ரூபாய் 2.83 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது 2022 ஆம் ஆண்டு மே மாதம் அதிகாரிகளிடம் ஜார்கண்ட் மாநிலத்தில் 210 கோடி ஊழல் பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் சுரங்க ஊழல் பணம் 1500 கோடி மதுபான ஊழல் 1500 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இது போல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் ஊழல் பட்டியலை கூறிக்கொண்டே போகலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் அரசின் திட்டங்கள் நேரடியாக சென்று அடைந்துள்ளது இது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமை வகித்தார் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் மகாராஜன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணன்,
மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் , தென்காசி பாராளுமன்ற தொகுதியின் அமைப்பாளர் ஆனந்தன் அயயாசாமி தென்காசி பாராளுமன்ற இணை பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ்,மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார்,தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர்பாண்டியன்,ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் ராமர், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பேஷன் குமார், மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வளர்மதி ,மகளிர் அணி மாவட்ட சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் குணசீலா, மாவட்ட மகளிர் அணி செயற்குழு உறுப்பினர்கள்
உமா மகேஸ்வரி ,சக்தி, கனி, கீழப்பாவூர் மண்டல் தலைவி பரமேஸ்வரி, துணைத் தலைவி சசிகலா தென்காசி பாஜக நிர்வாகிகள் எல்.ஜி.குத்தாலிங்கம்,
ராஜ்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.