June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பாட்டாக்குறிச்சியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு

1 min read

Opposition to construction of district playground at Patakurichi

12.12.2023
தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி பரும்பில் நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானம் கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில்தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், பட்டாக்குறிச்சியில் கிராம புல எண் 594ல் உள்ள பரும்பின் பெரும்பகுதி நிலத்தை கைப்பற்றி பட்டா மாற்றி பரும்பில் உள்ள காடுகளையும் அதில் உள்ள மரங்களையும் வெட்டி பறம்பின் அமைப்பை மாற்றி அதில் அரசு மாவட்ட விளையாட்டு திடல் மற்றும் இதர கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இல்லாது போனால் மேற்படி பரும்பில் வாழும் மான்கள் முழுவதுமாக வாழ்விடமின்றி அழிந்து போகும்.
மேலும் மான்கள் வாழ்வதற்கும், உணவு தேவைக்கும்
அருகில் உள்ள விவசாய நிலமான விளை நிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகும். இதன் காரணமாக வேளாண்மை பாதிக்கப்படும். விவசாயிகள் பெரும் துயருக்கு உள்ளாவார்கள். அனேக மான்கள் வெட்ட வெளியில் வேட்டைக்கு இரையாகும், சாலையில் விபத்துகளுக்கு உள்ளாகும். கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு மான்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளன. மேலும், மான்கள் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளுக்கு தப்பி செல்ல யாதொரு வழியும் இல்லை.
ஆகவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மேற்படி பட்டாக்குறிச்சி கிராம புல எண். 594 உள்ள பரும்பு நிலத்தில் மரங்களை வெட்டி விளையாட்டு திடல் மற்றும் இதர கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அதில் உள்ள மான்கள் பாதுகாப்பாக வாழ தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் நம் தமிழர் கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
One attachment

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *