June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் திருவாதிரை திருவிழாவில் தேரோட்டம்

1 min read

Chariot procession at Courtalam Thiruvadhirai festival

23.12.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு 5 தேர்தல் ஓடும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

குற்றாலம் திருக்குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த 18 ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நேற்று காலை 5 தேரோட்டம் நடைபெற்றது விநாயகர், முருகர், நடராஜர், குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மன், ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்பட்டது.

திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சிவனடியார்களின் சிவ பூத கனவாத்தியங்கள் முழங்க 5 தேர்களையும் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு 25ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபா ராதனை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி அதிகாலை 3 40 மணிக்கு மேல் சித்தர சபையில் நடராஜமூர்த்திக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும், அதிகாலை 4.40 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த திருவாதிரை திருவிழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்குமீ இரவு 7 மணிக்கும் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த திருவாதிரை தேரோட்ட நிகழ்ச்சியில் திருக்குற்றாலநாதர் கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன், மணியம் சுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், அகஸ்தியர் சன்மார்க்க சபை சார்பில் முத்துக்குமாரசாமி, சொக்கம்பட்டி ஜமீன்தார் பெரிய அனஞ்சி தேவர், சின்ன அனஞ்சி தேவர் வம்சாவழியினர் சொக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *