தென்காசியில் மக்களுடன் முதல்வர் முகாம்- ஆட்சியர் ஆய்வு
1 min read
Chief Minister’s camp with people in Tenkasi- Collector survey
23.12.2023
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் கூறியதாவது;-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க. மக்களுடன் முதல்வர் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி நகராட்சியில் 23,24, 25,28, 33 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் வேம்படி பள்ளிவாசலிலும், கடையநல்லூர் நகராட்சியில் 29,30,31,32 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் பண்பொழி ரோடு. மேலக்கடையநல்லூர் நாகம்மாள் திருமண மண்டபத்திலும், புளியங்குடி நகராட்சியில் 3,4,567 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் தெலுங்கு யாதவர் திருமண மண்டபத்திலும், சங்கரன்கோவில் நகராட்சியில் 11, 12, 13,14,15 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் புதுமனை தெருவிலுள்ள வர்த்தக சங்கத்திலும், செங்கோட்டை நகராட்சியில் 11, 12, 13,14,15 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் நகர்மன்ற கூட்ட மண்டபத்திலும், சுரண்டை நகராட்சியில் 10,11,12, 25, 26, 27 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் கீழச்சுரண்டை குறிஞ்சி மயில் மண்டபத்திலும், இராயகிரி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் பேரூராட்சி சமுதாயக் கூடத்திலும் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர். துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா. நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.