August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

1 min read

Chief Minister Project Special Camp with People in Surandai Municipality

25.12.2023
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சுரண்டை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம கீழச் சுரண்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.வீ.கே.புதூர் தாசில்தார் அழகப்ப ராஜா,தனி தாசில்தார் மகாலட்சுமி, சுரண்டை நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்(பொறுப்பு), மேலாளர் வெங்கடசுப்பிர மணியன், பொறியாளர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்தனர்.நகராட்சிதுறை,வருவாய் துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்தனர். மொத்தம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பட்டது.இதில் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தனர்.30 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.முகமை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.நிகழ்ச்சியில் சுரண்டை நகராட்சி துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், சுரண்டை ஆர்.ஐ.கண்ணன், பணியாளர்கள் வினோத்குமார்,வினோத் கண்ணன்,நாகூர் மீரான் பிள்ளை,சுரண்டை நகராட்சி கவுன்சிலர்கள்,அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *