June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர்: நிதீஷ்குமார் பேச்சு

1 min read

Vajpayee is a great leader: Nitish Kumar speech

25.12.2023
வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர் என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் பேசினார்.

நிதிஷ்குமார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் புகழ்ந்து பேசினார். அப்போது அவர், ‛‛வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர். அவரது ஆட்சி காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்தேன். அவர் எனக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தவர். பீஹார் முதல்வராக நான் பொறுப்பேற்றதில் வாஜ்பாயிக்கு முக்கிய பங்கு உண்டு. பாரபட்சம் இன்றி ஆட்சி செய்தார். என் வாழ்நாளில் அவரை மறக்க முடியாது. வாஜ்பாயின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன்”. இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *