June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெயலலிதாவிற்கு ஓ.பி.எஸ் ரூ.2 கோடி கடன் கொடுத்தாரா?- எடப்பாடி கண்டனம்

1 min read

Did OPS lend Rs 2 crore to Jayalalitha?- Edappadi condemned

27.12.2023
சில ரகசியங்களை வெளியிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்ல நேரிடும் என நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஓ.பன்னீர் செல்வம் சிறைக்கு செல்வது உறுதியாகிவிட்டது. அவர் மீதான வழக்கை விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.

ஜெயலலிதாவிற்கு ரூ.2 கோடி கடன் கொடுத்ததாக ஓபிஎஸ் சொன்னது, மோசமான வார்த்தை. போடி தொகுதியில் ஜெயலலிதாவிற்கு எதிராக வேலை பார்த்தவர் ஓபிஎஸ்.

தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துச் சொன்னது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம்.
வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால் விபத்து நடந்திருக்காது.

எண்ணூரில் எண்ணெய் மற்றும் வாயுக்கசிவால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *