சினிமா மக்கள் தொடர்பாளர் கடையடம் ராஜு மரணம்
1 min read
Kadayam RaJu died ( cinema PRO)
சினிமா மக்கள் தொடர்பாளராக இருந்து வந்தவர் கடையம் ராஜு. இவர் சிவாஜி ரசிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர்பாளராக திகழ்ந்தார்.இவர் இன்று காலமானார்.
நடிகர்கள் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் காலத்தில் இருந்தே சினிமாவில் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றியவர் கடையம் ராஜூ. தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தைச் சேர்ந்தவர். இவர் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தவர்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். எம்.பி. திருநாவுக்கரசருக்கு மேனேஜராகவும் பணிபுரிந்தார். உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கடையம் ராஜூ, இன்று காலை 7 மணியளவில் காலமானார். இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இல்லத்திற்கு 11 மணியளவில் உடல் கொண்டு வரப்பட்டது. அவருக்குத் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், பத்திரிகையாளர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.