பாவூர்சத்திரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
1 min read
State Level Cricket Tournament at Pavurchatra
27.12.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநி திஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநி திஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி பிலிவ் கிரிக்கெட் சார்பில் மாநில அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டி பாவூர்சத்திரத்தில் டிச.24ந்தேதி முதல் 31ந்தேதி வரை நடைபெறுகிறது.
கிரிக்கெட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை தலைமை தாங்கினார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை, ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணை அமைப்பாளர் சிவ.அருணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இரா.சாக்ரடீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ..சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணி ராஜ், மாவட்ட திமுக தொண்டரணி தலைவர் கீழப்புலியூர் மிலிட்டரி வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் காலசாமி,கபில்தேவதாஸ், வழக்கறிஞர் ஹரி, சமுத்திரபாண்டியன், செல்வராஜ், ராஜேந்திரன், ஷாலிமேரி, கடங்கநேரி அசோக், கருணாநிதி, சுந்தரிமாரியப்பன், பூப்பாண்டியன், காளிராஜ், நாகராஜ், முருகன், தானியேல், தங்கப்பாண்டி, வினோத். செட்டியூர் அரிகிருஷ்ணன், சூர்யா, அருணாபாண்டியன், சிவசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தீபன்சக்கரவர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.