தென்காசியில் பாஜக ஆர்ப்பாட்டம்
1 min read
BJP protest in South Kashmir
27.12.2023
இந்திய துணை ஜனாதிபதி பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரை .அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே ஏ ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பாஜக பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன் அருள்செல்வன் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பார்வையாளர் மகாராஜன் கண்டன உரை ஆற்றினார்.
இது நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் வி அன்புராஜ்,
மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்,
மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், பாலமுருகன், பால்ராஜ்,
மாவட்ட செயலாளர் புலிக்குட்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் முப்புடாதி, மாவட்ட ஓபிசி அணி தலைவர் மாரியப்பன், மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராமர் உள்ளாட்சி பிரிவு மாவட்டத் தலைவர் கருப்பசாமி,
அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் ல்.ஜி.குத்தாலிங்கம்,
பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன்
ஆன்மீக பிரிவு மாவட்டத் தலைவர் வெங்கடேஷ், தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டரிநாதன், பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் முருகன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் முருகன், கடையம் கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தினகுமார்,
தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், தென்காசி வடக்கு ஒன்றிய தலைவர் ஐயப்பன்,
செங்கோட்டை ஒன்றிய தலைவர் மாரியப்பன், மேல நீலித நல்லூர் ஒன்றிய தலைவர் பரமசிவன், சங்கரன்கோவில் நகர தலைவர் கணேசன், மகளிரணி மாவட்ட பொது செயலாளர் வளர்மதி, மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் விவேக், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் விஜய சேகர், மற்றும் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.