தென்காசியில் மனித சங்கிலி போராட்டம்
1 min read
Human chain protest in Tenkasi
28.12.2023
தென்காசியில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு தொழில் மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி 8 வது கட்டமாக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க தலைவர் அன்பழகன் தலைமையில் சங்க இணைச் செயலாளர் சரவண குரு, தென்னை நார் தயாராப்பாளர்கள் சங்க செயலாளர் கல்யாணகுமார், செங்கோட்டை மர அறுவை மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அரிசி ஆலை பொருளாளர் நாகராஜ், கீழப்பாவூர் வட்டார அரசி ஆலை சங்க பொருளாளர் சிவகுமார் ஆதிநாராயணன் மற்றும் திரளான தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்திற்கு தென்காசி மாவட்ட தேமுதிக செயலாளர் எஸ்.பழனி சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். உயர்த்தப்பட்ட மின் கட்டணமான பரபரப்பு நேர கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரமான நடுத்தர தொழில்களை காப்பாற்றிட வேண்டி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் தென்காசி மாவட்ட தேமுதிக தலைவர் எஸ்.பழனிசங்கர் உடன் பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு, துணைச் செயலாளர் காமராஜ், நகரச் செயலாளர் பேச்சி, சுரண்டை கணேசன்,சேர்மன், தென்காசி வேலாயுத பாண்டியன்,சுடலைமணி, ராஜேந்திரன் என்ற தாசன், கடையம் சுரேஷ், சமுத்திர பாண்டியன், கீழப்பாவூர் உதயகுமார், கேப்டன் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்ட போராட்ட முடிவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத்தின் தலைவர் அன்பழகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.