August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் சொக்கலால் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கோரிக்கை

1 min read

Request for renovation of high school buildings in Pavurchatram Chokalal

28.12.2023
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் ஆகியோரை சந்தித்து பாவூர்சத்திரத்தில் உள்ள தபி சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் 1951 ஆம் ஆண்டு மாண்புமிகு பி எஸ் குமாரசாமி ராஜா சென்னை மாகாணம் முதல்வராக இருந்த போது 1 11 1951 இல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது பின்பு 1962ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களோடு பாவூர்சத்திரத்திற்கு வருகை தந்த அரிராம் சேட் அவர்களிடம் பாவூர்சத்திரத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் இங்கு நடைபெறும் பள்ளிக்கு போதிய இடமில்லை அதனால் தாங்கள் இட வசதியும் கட்டிட வசதியும் செய்து தர வேண்டும் என்று அரிராம் சேட்டை கேட்டு இருக்கின்றார்கள்

அதன்படி அரிராம் சேட் அவர்கள் அதே ஆண்டில் மக்களின் குறையை நீக்க பாவூர்சத்திரம் பள்ளிக்கு 9.7 ஏக்கர் நிலமும் செட்டியூர் ரோட்டில் ஐந்து ஏக்க நிலமும் பள்ளிக்கு வாங்கி அரசிடம் கொடுத்து தனது தந்தை த.பி சொக்கலால் அவர்கள் பெயரில் ‌ உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு இடம் வாங்கி கொடுத்து கட்டிடம் கட்ட 30 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து உள்ளார்கள் 1964 இல் அரிராம் சேட் அவர்கள் இறந்த பிறகு 27 9 1966 இல் பக்தவச்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பாவூர்சத்திரத்திற்கு வருகை தந்து தபி சொக்கலால் உயர்நிலைப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட இரண்டரை ஆண்டுகள் ஆகி இருக்கிறது 4 4 1969 இல் கலைஞருடைய ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா தலைமையில் சட்ட அமைச்சராக இருந்த மாதவன் இந்த கட்டிடத்தை திறந்து வைத்திருக் கிறார்கள் அந்த வேளையில் பள்ளிக்கு அறிவியல் ஆய்வுக்கூடம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது கோரிக்கை ஏற்று 23 12 1969 இல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கு அப்போது நிதி அமைச்சராக இருந்த கே ஏ மதியழகன் ஆய்வு கூடத்திற்க்கு அடிக்கல் நாட்டி உள்ளார்கள் இந்த ஆய்வுக்கூடம் 13 3 1973 இல் ஆலடி அருணா திறந்து வைத்து இருக்கின்றார்.

இப்படி புகழ் பெற்ற இந்த பள்ளி கட்டிடம் இன்று சிதலமடைந்து கிடப்பது வேதனை அளிக்கிறது பழமை மாறாமல் பெருந்தலைவர் காமராஜரின் நினைவை போற்றுகின்ற வகையிலும் அரிராம் சேட் அவர்களுடைய நினைவில் இயங்குகின்ற இந்த பள்ளியின் கட்டிடம் சரி செய்யப்பட வேண்டும் இந்த பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர்கள் தற்போது நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்பட்டு உள்ளது பள்ளி முழுவதும் திறந்த வெளியாக காட்சியளிக்கிறது பள்ளியினுடைய குறிபிட்ட இடத்தை நான்குவழி சாலைக்கு அரசு எடுத்துக் கொண்ட காரணத்தினால் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வைத்து இந்த கட்டிடங்களையும் சுற்றி உள்ள சுவர்களையும் கட்ட வேண்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும் தபி சொக்கலால் ராம்சேட் நினைவை தாங்கி இருக்கின்ற இந்த பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடக்களிலும் சுவர்கள் சரி செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று
குறிப்பிட்டிருந்தார் இதில் துணைப் பொதுச் செயலாளர் டேவிட் நாடார் சாம்பவர் வடகரை கிளை தலைவர் மோகன் செயலாளர் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *