திருநெல்வேலி ஈரோடு ரயில் செங்கோட்டை வரை நீடிப்பு
1 min read
Tirunelveli Erode Train Extension to Red Fort
28.12.2023
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கோரிக்கையை ஏற்று திருநெல்வேலியில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் இனிமேல் செங்கோட்டை வரை செல்லும் இந்த ரயில் சேரன்மாதேவி அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி வழியாக செங்கோட்டை வரை செல்லும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடந்த டிசம்பர் 13ஆம் தேதி ஒன்றிய ரயில்வே அமைச்சரை சந்தித்து திருநெல்வேலி ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயிலை சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஒன்றிய ரயில்வே அமைச்சர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி ஒன்றிய இரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கொங்கு மற்றும் தென் மாவட்ட இரயில் பயணிகளின் நலனுக்காக ஈரோடு – திருநெல்வேலி (இரயில் எண்கள் 16845 | 16846) இரயிலை
திருநெல்வேலியில் இருந்து பத்தமடை, சேரன்மகாதேவி, கல்லடைக்குறிச்சி அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்ச் சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை நீட்டித்து இயக்கிட வேண்டும் என நேரில் வலியுறுத்தி கடிதம் அளித்தார்.
இந்த சந்திப்பின் போது ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, வைகோ எம்பி யின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர்
உடன் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கபட்டுள்ளது அதற்கான முறையான அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இனி அம்பை மற்றும் சேரன்மகாதேவியிலிருந்து காலை 6 மணிக்கு நேரடியாக ஈரோடு வரையும், ஈரோட்டில் இருந்து நெல்லை 9.30 மணிக்கு வழியாக செங்கோட்டை வரையும் தினசரி பயணம் செய்யலாம்.
இந்த ரயில் தினமும் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை,சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், கரூர், புகளூர், கொடுமுடி, வழியாக ஈரோடு சென்றடையும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் இனிமேல் நாள்தோறும் அதிகாலை 4.50 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு காலை 6:30 மணிக்கு திருநெல்வேலி க்கும் மாலை 3 மணிக்கு ஈரோடுக்கும் சென்றடையும். அதே வழித்தடத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் இந்த ரயில்
இரவு 9 மணிக்கு திருநெல்வேலிக்கும் இரவு 11: 15 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திற்கும் சென்றடையும் டையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி ஈரோடு ரயிலை செங்கோட்டை வரை நீடிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பிக்கு திருநெல்வேலி தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.