May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

1 min read

Chief Minister camp with people in Geezapavur municipality

5.1.2024
கீழப்பாவூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டைவே.ஜெயபாலன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாகவும். எளிதாகவும் சென்று சேர்த்திட வழிவகுக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்கிற புதிய திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமையில், செயல்அலுவலர் .ஜா.மாணிக்கராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கே.ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றத. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று மக்களுடன் முதல்வர் முகாமினை தொடங்கி வைத்தார்.

மேற்படி முகாமானது ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் க.ஓசனா பெர்னானண்டோ மற்றும் 13 துறைகளை சேர்ந்த அரசுதுறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களிட மிருந்து வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பெறப்பட்டது.

இந்த முகாமில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வி.ராதா விநாயகப்பெருமாள். செ.கோடிஸ்வரன், மு.மாலதி முருகேசன். கு.ஜெயசித்ரா குத்தாலிங்கம். மு.கனகபொன்சேகா முருகன். க.இசக்கிராஜ், சி.அன்பழகு சின்னராஜா, ஜா.ஜேஸ்மின் யோவான், ரா.விஜி ராஜன், மா.இசக்கிமுத்து, சு.பவானிஇலக்குமண தங்கம், தா.தேவஅன்பு, ஜெ.முத்துசெல்வி ஜெகதீசன், த.வெண்ணிலா தங்கச்சாமி. ம.சாமுவேல்துரைராஜ், சீ.பொன்செல்வன் மற்றும் பொதுமக்கள். மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.முடிவில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா மாணிக்க ராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.