பொங்கல் வைக்க நல்ல நேரம்
1 min read
Good time for Pongal
14.1.2024
தைமாதம் ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தமிழர் திருவிழாவான இதை உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சூரியனை வணங்கும் நோக்கத்துடனும் கொண்டாடுகிறோம்.
ஜோதிட ரீதியில் சூரியன் மகர ராசியில் இருக்கும் காலம்தான் தை மாதம். சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நாள்தான் தை 1-ந் தேதி. அதைத்தான் பொங்கல்பண்டியையாக கொண்டாடுகிறோம்.
நாளை( 15.1.2024) பொங்கல் பண்டிகை. அன்றைய தினம் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது மரபு. இன்றை தினம் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் சந்திர ஓரையில் மகர லக்கினத்தில் பொங்கல் வைத்து வழிபடலாம். அதனை வி்ட்டால் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். அல்லது காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து வணங்கலாம்.
பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் பொங்கலை முதலில் பசுவுக்கோ, அல்லது காளைக்கோ கொடுக்க வேண்டும். அதன்பின் காக்கைக்கு வைத்து நாம் சாப்பிட வேண்டும்.