June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே பைக் – லாரி மோதி 2 பேர் பலி

1 min read

2 killed in bike-lorry collision near Tenkasi

1/2/224
தென்காசி அருகே சிவராமப் பேட்டையில் பைக் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே .இடைகால் வேத கோவில் தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் அரவிந்த் (வயது 22), செங்கோட்டை அருகே இலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் ராஜு (வயது 22) இவர்கள் இருவரும் நண்பர்கள். இடைகாலில் கடந்த மூன்று நாட்களாக கோவில் திருவிழா நடைபெற்றது திருவிழாவிற்காக நண்பரான ராஜு வந்திருந்தார்.

இருவரும் ஒரே வண்டியில் தென்காசிக்கு சென்று விட்டு மீண்டும் இடைகாலுக்கு திரும்பி வரும் வழியில் சிவராம் பேட்டை வளைவில் வந்தபோது எதிர்பாராத விதமாக விருதுநகரில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் மீது நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் சென்ற இருவரும் லாரியில் சிக்கினார் இதில் பைக்கை ஓட்டிச் சென்ற இடைகால் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார் பின்னால் இருந்த ராஜு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் உடனே அருகில் உள்ளவர்கள் ராஜுவை மீட்டு மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது தொடர்ச்சியான முறையில் சிமெண்ட் லாரியில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக ஆகிவிட்டது சிவராம் பேட்டை சாலையை வளைவில் தொடர் விபத்து ஏற்படுவதால் வளைவு சாலையை விரிவுபடுத்தி சென்டர் மீடியன் வைத்து ஒரு வழி சாலையாக அமல்படுத்த வேண்டும் நெடுஞ்சாலைத் துறைக்கு என பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *