June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் ஆய்வு

1 min read

Survey of Dengue Fever Prevention Work in Keezapavur Municipality

3/2/2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் ஜாம் மாணிக்கராஜ் முன்னிலையில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு பணிகளை
தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.முரளிசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவு படி கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்காசி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டர்.முரளிசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கீழப்பாவூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீமூலநாதன், கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் ஜா.மாணிக்கராஜ் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர், டெங்கு மஸ்தூர்பணியாளர் கள் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது டெங்கு கொசுப்புழு ஒழிப்புபணி, சுகாதார பணி, புகை மருந்து அடித்தல், குடிநீரில் குளோரினேசன் ஆய்வு செய்து களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *