June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆய்க்குடி ஜெ.பி. கல்லூரியில் கருத்தரங்கம்

1 min read

Ayikudi J.P. Seminar in college

9.2.2024
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவை சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.மைக்கேல் மரியதாஸ் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட சாலைப் பாதுகாப்பு அமைப்பு உறுப்பினரும் வைகை ஓட்டுநர் பயிற்சி மைய நிறுவனர் ஆர்.குமார் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் சாலைகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறை களையும் மாணவர்களுக்கு சிறப்புற எடுத்துரைத்தார்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் வே.சுப்பிரமணி யன் மற்றும் இந்திய செஞ்சிலுவைதிட்டஅலுவலர் பே.சிவசெல்வகணேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *