June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அரசு மருத்துவ மனையில் இலவச காது கேட்கும் கருவி வழங்கும் முகாம்

1 min read

Free hearing aid camp at Tenkasi Government Hospital

9.2.2024
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் காது கேட்கும் கருவி வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கபட்டது இந்த முகாமிற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வபாலா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் சரஸ்வதி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

இந்த முகாமில்செவித்திறன் பாதுகாப்பு, காது மூக்கு தொண்டை நோய் சிகிச்சையில் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து டாக்டர்.மணிமாலா விளக்கி கூறினார். இந்தக் கூட்டத்தில் டாக்டர் ராஜேஷ், டாக்டர்.கீதா, டாக்டர்.கார்த்திக், டாக்டர் அறிவுடைநம்பி , ஆடியோலஜிஸ்ட் ரெக்ஸ், மேனேஜர் ரவி, ஜெயந்தா , திருமலை, செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *