June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மேல முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

1 min read

Maha Kumbabhishekam at Tenkasi Mela Mutharamman temple

10.2.2024
தென்காசி மேல முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

தென்காசி கூலக்கடை பஜாரில் மேல முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

முதல் நாள் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை, வாஸ்து பூஜை, பிரவேச பலி , கட ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாக வாசனம், சோம கும்ப பூஜை,சிவ சூரிய பூஜை, மண்டல பூஜை, திருமுறை பாராயணம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ண பகுதி , தீபாராதனை, விநாயகர் வழிபாடு, வர்ண கும்ப பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது .

மூன்றாம் நாள் காலையில் விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை, மண்டல பூஜை, வேதிகா அர்ச்சனை, மகா பூர்ணகுதி, யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மூலவர் விமானம், பரிபார தேவதைகள், விமானம் மற்றும் கோபுர த்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் தீபாராதனை, மகாபிஷேகம், அலங்கார தீபாரதனை, மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவில் தலைமை அர்ச்சகர் ரமேஷ் பட்டர் நடத்தி வைத்தார்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜான்சிராணி, செயல் அலுவலர் முருகன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *