August 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் நடந்த 6பேர் கொலையில் 15 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது

1 min read

n the murder of 6 people in Tenkasi One arrested after 15 years

12.2.2024
தென்காசி 6 பேர் கொலையில் தொடர்புடைய நபர்நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர் என்ற மணிசாகுல் என்ற அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தென்காசியில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அபு குரைரா முக்கிய குற்றவாளி ஆவார்.

கடந்த 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த அபு குரைராவை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டதின் பேரில் கடையநல்லூர் மற்றும் தென்காசி காவல் துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா நேற்று சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து
நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *