June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

1 min read

Tenkasi: Acceptance of Pledge for Abolition of Bonded Labour

12.2.2024

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமானது அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக பணியாளர்களும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணியாளர்களும் இணைந்து, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்
இரா. ஜெஸ்லின் தலைமையில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர் ராஜேஷ் ,மருத்துவர் கீதா, மருத்துவர் சரஸ்வதி, மருத்துவர் மாரிமுத்து, மருத்துவர் அன்ன பேபி, செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, வசந்தி, செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *