June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் அருகே புதிய ரேசன் கடை திறப்பு விழா

1 min read

Inauguration of a new ration shop near Geezhapavoor

15.2.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் இராஜபாண்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய ரேசன் கடை கட்டிடத்தை ஊராட்சி மன்றத் தலைவர் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இராஜ ஊராட்சியில் 2023-2024ம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமல திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை இராஜபாண்டி ஊராட்சி மன்ற தலை ச.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இராஜபாண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கேபிள் கண்ணன் (எ) சொக்கலிங்கம், சி.தங்கத்துரை. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பே.ஆறுமுகச்சாமி, வே.ராமையாபாண்டியன், ரா கமலம், வெ.ராமலெட்சுமி வெள்ளத்துரை சுப்பிரமணியன் மற்றும் அனைத்து சமுதாய நாட்டாமைகளும், ஊர் பெரியவர்களும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *