June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு – ஆர்ப்பாட்டம்

1 min read

awyers boycott court in Tenkasi – Demonstration

2009 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ததோடு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

சென்னை உயர்நீதிமன்றத் தில் கடந்த 19.02.2009 அன்று காவல்துறையினரால் வழக்கறிஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கருப்புதினம் அனுசரிக்கப்படுகிறது, அந்த வகையில் தென்காசி பார் அசோசியேஷன் சார்பில் தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நீதிமன்ற புறக்கணிப்பும் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ஏ கே காளியப்பன், கே.பி.குமார் பாண்டியன், கே.திருமலை,
டி எம்.மாரியப்பன், அயூப், முகமது காலித், சண்முகசுந்தரம், சுந்தர்ராஜ், மாடசாமி பாண்டியன், ஜெபா, ராமச்சந்திரன், தூதர்சிங், பசும்பொன், மாடக்கண், மஞ்சு கிருஷ்ணா, குலசேகரன், ஐய்யப்பன், நிஷாந்த கண்ணன், இராமலிங்கம், முருகேசன், திருமலைக் குமார், ரெங்கராஜ், அருணாசலம், சரவணன், இசக்கிபாண்டி,முருகேசன், விஜயசெந்தில், குமார், அருணாசலம், சசிகுமார், முத்துகுமார், செல்வகுமார், முத்துராஜ், சிந்தாமணி, இசக்கிராஜ், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *