சேரன்மகாதேவி அருகே கார் கவிழ்ந்து இருவர் பலி
1 min read
Two killed in car overturn near Cheranmahadevi
3.3.2024
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கார் கவிழ்ந்ததில் பத்தமடையை சேர்ந்த அலி திவான் மைதீன் 23, முகமது பைசல் 30 ஆகிய இருவர் பலி. ஐந்து பேர் காயமடைந்தனர். சேரன்மகாதேவி அருகே கங்கனாங் குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து. இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பத்தமடையைச் சேர்ந்த முகமது மற்றும் மைதீன் உட்பட ஏழு பேர் ஒரு வாகனத்தில் கங்கனான் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். ஊர் திரும்புகையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்ததில் மைதீன் மற்றும் முகமது இருவர் சம்பவ இடத்திலே பலியாகினர். மீதமுள்ள ஐந்து பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர்.