April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

மச்சியில் இருந்து பாய்ந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Tears flowed from Macchi/ comedy story/ Tabasukumar

6.3.2024
கண்ணாயிரம் விபத்தில் மறைந்து ஆவியாக பூனைக்குள் புகுந்துவிட்டதாக கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை கறுப்பு பூனையை கூண்டுக்குள் அடைத்து வாழைப்பழம் கொடுக்க முயற்சி செய்தார்.
இந்த நேரத்தில் அருவாஅமாவாசையின் அருவாளுக்குப் பயந்து மச்சியில் மறைந்திருந்த கண்ணாயிரம் சோளக்கொல்லை பொம்மை போல உடை அணிந்து தலையில் பானையை மூடிக்கொண்டு எட்டிப்பார்த்து நான் கண்ணாயிரம்..எனக்கு பசிக்குடா என்று சொல்ல அருவாஅமாவாசையும் கண்ணாயிரம் நண்பர்களும் நம்பமறுத்தனர்.
கண்ணாயிரம் ஏணிவழியாக இறங்க முயன்றபோது ஏணியைத் தூக்கிவிட்டு நீ ஆவிதானே பறந்துவா என்றனர்.
கண்ணாயிரம் அழுதபோது.. டிரங்பெட்டியில் இருக்கும் பாடியைக் கொடு. நாங்க ஏணியை வைக்கிறோம் என்று மோட்டார்சைக்கிள் வாலிபர் சொல்ல..கண்ணாயிரம்..அடப்போங்கடா..இன்னாங்க என்று டிரெங்பெட்டியில் இருந்த பூங்கொடியின் பாடியை எடுத்து கயிற்றில் கட்டி வீச.. அதைப்பார்த்த அருவா அமாவாசை கோபத்தில்.. ஏய் மடையா.. விளையாடுகிறாயா.. உன்பாடியை போடு டா என்று கத்த, கண்ணாயிரம்..என்ன என் பாடியா.. நான் பாடியெல்லாம் போடமாட்டேன்.. பனியன்தான் போடுவேன்..என்றார். அருவாஅமாவாசை..ஏய்..கோபத்தை கிளப்பாத..டிரங்பெட்டியில் இருக்கிற உன்பாடியை போடு என்றார். கண்ணாயிரம், அட என்னங்க..லூசுமாதிரி பேசுறீய. டிரங்பெட்டியிலே பூங்கொடி பாடிதான் இருக்கு..என்க.. அருவாஅமாவாசை, டேய்..பூங்கொடிதான் உயிரோட இங்கே கல்லு மாதிரி இங்கே நிக்காள..அப்புறம் எப்படி அவா பாடி டிரெங்பெட்டியிலே இருக்கும்.பொய் சொல்லாத உன்னை உதைப்பேன் என்றார். கண்ணாயிரம் ஒன்றும் புரியாமல் விழித்தார்.என்னடா..பாடி பாடிங்கிறீங்க..கயிறுல கட்டி பாடியைப் போட்டாலும் வேண்டாங்கிறாங்க..கண்ணாயிரம் பாடிதான் வேணுமுங்கிறாங்க..நான் பனியன்தானே போடுவேன். சொன்னாலும் இவங்களுக்கு புரியமாட்டேங்குதே.. என்ன செய்ய என்று கண்ணாயிரம் புலம்பினார். அருவாஅமாவாசை..ஏய்..என்னாச்சு..டிரெங்பெட்டியிலே பாடி இருக்குன்னு பூங்கொடி சொன்னாளே.. நீ இல்லை என்கிற.. நீஆவி வடிவில் இருக்கிற பூனையை நல்லா கவனிச்சுக்கிறோம்.. சைவம் அசைவம் என்று விதவிதமா வாங்கிப் போடுறோம்.. எலி.. மூணு வேளையும் பிடிச்சிப் போடுறோம்.. கண்கலங்காம பாத்துக்கிறோம்.. அதனால கண்ணாயிரம்..நீ கலங்காதே.. விபத்தில் மேலேப் போனது போயிட்ட.. ஆவியாவந்து கொடுமை பண்ணாதே.. பாடியக் கொடு என்று கெஞ்சினார். கண்ணாயிரம் கண்களை கசக்கிக்கொண்டு.. யெவ் நான் விபத்திலே சாகலய்யா..தப்பிப்பிழைச்சிட்டேன்.. நான் உயிரோடுதான் இருக்கேன்..நான் நல்லாத்தான்யா பேசுறேன்.. ஆவி..ஆவி என்று சொன்னா பாய்ஞ்சிடுவேன்..ஏணியை வைங்கடா என்று கத்தினார். மோட்டார்சைக்கிள் வாலிபரோ..எந்த ஆவியும்..தன்னை ஆவின்னு ஒத்துக் கொண்டதில்லை. .நீ மட்டும் ஒத்துக்கொள்ளப் போறீயா..கிடையாது..கோடாங்கியை அழைச்சிட்டுவந்து உன்னை எப்படி விரட்டணுமோ..அப்படி விரட்டுறோம் என்றான். கோடாங்கி என்றதும் கண்ணாயிரத்துக்கு குப்பென்று வியர்த்தது. டேய்..அப்படி மட்டும் பண்ணாதீங்கடா.. உங்களுக்கு பாடிதானே வேணும்.. டிரங்பெட்டியையேத் தூக்கிப் போடுறன்.. எடுத்துக் கிடுங்கடா.. ஏணியை வையுங்கடா என்று கத்தினார். பூங்கொடியோ..அய்யோ..டிரங்பெட்டியை கீழேப் போடாதீங்க..உடைஞ்சிடும்..அது எனக்கு சீதனமா வந்தது..என்று கெஞ்சினார்.
உடனே கண்ணாயிரம்,பூங்கொடி அழாதே,..நான் டிரங்பெட்டியை போடல என்றார். அப்போது,மோட்டார்சைக்கிள் வாலிபர் ,எங்களுக்கு பாடிதான் வேணும்..டிரெங் பெட்டி வேண்டாம் என்று சொன்னார். உடனே கண்ணாயிரம் டேய்களா,இம்சை பண்ணாதீங்கடா..பாடியை கயிறில் கட்டிப் போட்டாலும் வேண்டாங்கிறீங்க.. என்பாடிதான் வேணுமுங்கிறீங்க,நான் பாடி போடமாட்டேன்னு சொன்னாலும் கேட்கமாட்டேங்கிறீங்க..டிரங்பெட்டியைத் தூக்கிப் போடுறன்னு சொன்னாலும் வேண்டாங்கிறீங்க..எனக்கு வயிறு பசிக்குது.. ஆனா பூனைக்கு பழம் கொடுக்கிறீங்க.. என்னடா ஆச்சு உங்களுக்கு என்று கண்ணாயிரம் கேட்டார்.
அதற்கு மோட்டார் சைக்கிள் வாலிபர்.. அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. விபத்தில் புதுவை முதியவர் பலின்னு போட்டுவிட்டாங்க.. அதனால பாடியை புதைக்கிறதுதானே மரபு. இப்படி மச்சிமேல பாடியை ஒளிச்சி வச்சா எப்படி..போலீசுக்கு போகவேண்டியது இருக்கும் என்று எச்சரித்தார். கண்ணாயிரம் கோபத்தில்..முதியவர் விபத்தில் பலின்னா.. அது நானாடா.. டேய் அது வேற ஆளா இருக்கும்டா.. நான் உயிரோடு இருக்கேன்டா.. நான் இரவில் ஊருக்கு காரில் வந்ததால்..நீங்க என்னைப் பாக்க முடியல என்றார். அருவாஅமாவாசையோ..ஏமாத்துறான்..ஏமாத்துறான்..பூனை வடிவில் வந்து என் காதை ஏன் கடிச்ச என்று கேட்டார். கண்ணாயிரமோ..பூனை கடிச்சா..அதுக்கு நானா பலி..அதை விரட்டியிருப்பிய..அது கோபத்தில் உங்கள் காதை கடிச்சிருக்கும்..நீங்க என் காதை ஏன் கடிச்சிய..அப்போ நீங்க..ஆவியா என்று கண்ணாயிரம் மடக்கினார்.
பூங்கொடியும்..ஏங்க.. அவங்க..என்னன்னமோ சொல்லுறாங்க..ஒண்ணும் புரியல என்க..அருவாஅமாவாசையோ.. ஏம்மா..நீ முழுகாம இருக்க.. நீ உள்ளேப் போ.. உனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது.. நாங்க அவனைப் பாத்துக்கிறோம்.. இவ்வளவு பேசுறானே..முகத்தைக் காட்டுறானான்னு பாரு. பானையை வச்சி நல்லா மூடிக்கிட்டு ஏமாத்துறான்.. அவனை சும்மாவிடக்கூடாது.. நீ உள்ளே போ என்றார்.
கண்ணாயிரம்..யோவ்..முகத்தை மூடுன பானையை கழற்ற முடியலய்யா.. அதான் பிரச்சினை என்று சொல்ல அருவாஅமாவாசை..சரி.. குரல் ஏன் முரட்டுக்குரலா மிரட்டுறமாதிரி இருக்கு.. இது ஆவி குரல்தான். .கண்ணாயிரம் குரல் இல்லை என்க.. கண்ணாயிரமோ, யோவ்,பானையை தலையில் மூடிக்கிட்டு பேசுறதால..அப்படி குரல் முரட்டுத்தனமா இருக்கு.. மற்றபடி.. இது ஆவி குரல் அல்ல.. இது ஆள் குரல் என்றார். மோட்டார் சைக்கிள் வாலிபரோ.. ஆதெல்லாம் நம்மமுடியாது..பேப்பரில போட்டாச்சி..அதனால..நீ செத்தவன்..செத்தவன் தான் என்றான். கண்ணாயிரத்துக்கு கோபம் கொப்பளித்தது. டேய்களா..உண்மையிலே என்னை ஆவியாக்கி விடாதீங்கடா.. ஓடுங்கடா என்று மிரட்டினார். பூனையும் கூண்டுக்குள் சுற்றி சுற்றி வந்து மியாவ் மியாவ் என்று கத்தியது. மோட்டார் சைக்கிள் வாலிபர்.. ஊஷாரா இருங்க.. ஆவி கோபமாயிட்டு ஓடத் தயாரா இருங்க என்றான். கண்ணாயிரம்..டேய்களா.ஏணியை வைப்பீங்களா..இல்லையா என்று கேட்க.. அவர்கள் மாட்டோம் என்றார்கள். கண்ணாயிரத்துக்கு சினிமாவில் கதாநாயகன் கயிறைக்கட்டிக்கொண்டு பாய்வது நினைக்கு வந்தது. மச்சில் கிடந்த வடக்கயிறை எடுத்து மச்சியில் உள்ள கம்பி வளையத்தில் இறுக்கிக் கஷ்டப்பட்டு கட்டினார். டேய்களா..ஏணி தரமாட்டீங்களா..இதோ வர்ரேன்டா என்று கத்தியபடி மச்சிலிருந்து கயிற்றைப் பிடித்தூக்கொண்டு கீழே குதிக்கத் தயாரானார்.. அருவாஅமாவாசை.. ஏய்..ஏய் என்று கத்த, கண்ணாயிரம் சினிமாவில் வருவதுபோல சொயிங் என்று கயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே பாய. அருவாஅமாவாசை மற்றும் மோட்டார் சைக்கிள் வாலிபர் மிரள கண்ணாயிரம் நேராக.. பூனை அடைபட்டிருந்த கூண்டு மேல விழ, அதன் கதவு திறந்து பூனை மியாவ் மியாவ் என்று அருவாஅமாசை மீது பாய்ந்து அவரது மற்றோரு காதை கடிக்க அவர் அய்யோ.. அய்யோ..காது போச்சு என்று கதறியபடி ஓட பூனை அவரை விரட்டியது. அவர் ஓட பூனை விரட்ட.. மோட்டார்சைக்கிள் வாலிபர் மற்றும் கண்ணாயிரம் நண்பர்கள் பின்னால் விரட்ட அருவா அமாவாசை அந்தப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் ஓடி தஞ்சம் புகுந்தார். கண்ணாயிரம்..கீழே விழுந்து எழுந்து..நான் செத்துப் பிழைச்சவண்டா..எமனைப் பாத்துச் சிரிச்சவண்டா என்று பாட்டுப்பாடி ஆடினார். பூங்கொடி ஓடி வந்து..ஏங்க முதல்ல..இந்த பானையைக் கழற்றுங்க என்க என்னால முடியல என்று கண்ணாயிரம் புலம்ப,கண்ணாயிரம் தலையில் மாட்டியிருந்த பானையை பூங்கொடி இரண்டு கைகளால் ம்..ஆ..ம். ஆ..என்று இழுக்க முயல..கண்ணாயிரம் ஓ..என்று கத்தினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்
புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.