December 9, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் பறக்கவிட்ட பாடி/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram fly the Badi/ comedy story / Tabasukumar

29.2.2024
கண்ணாயிரம் விபத்தில் மறைந்துவிட்டதாகவும் அவரது ஆவி கறுப்பு பூனையில் புகுந்திருப்பதாகவும் நம்பிய அவருடைய மாமனார் அருவாஅமாவாசை பூனையைப் பிடித்து கிளிக்கூண்டில் அடைத்து வாழைப்பழம் கொடுத்தார். அருவாஅமாசையின் அருவாளுக்குப் பயந்து மச்சில் ஏறி பானையை தலையில் மாட்டிக்கொண்டு சோளக்கொல்லை பொம்மை போல் வேட்டியை சுற்றிக்கொண்டு நின்ற கண்ணாயிரத்துக்கு வயிறு பசித்தது.
இந்த நேரத்தில் கண்ணாயிரம் ஆவி புகுந்ததாக நினைத்த பூனைக்கு வாழைப்பழத்தை ஊட்ட அருவாஅமாவாசை போராட.. அதைப்பார்த்த கண்ணாயிரம் ஏங்க.. எனக்கு வயிறு பசிக்குதுங்க.. எனக்கு வாழைப்பழத்தைக் கொடுங்க என்று கெஞ்சினார்.
அருவாஅமாசை.. யாரது என்று குரல் எழுப்ப..கண்ணாயிரம் மூடியிருந்த பானை ஓட்டை வழியாக.. நான்தான் கண்ணாயிரம் என்று அப்பாவியாகக் சொன்னார்.
ஆனால் அருவாஅமாவாசையுடன் இருந்த கண்ணாயிரம் நண்பர்கள்.. கண்ணாயிரம்தான் ஆவியாகிட்டாரே.. அவர் பூனைக்குள்ளே புகுந்திருக்காரு.. நீ யாரு என்று கேட்டனர். அதற்கு கண்ணாயிரம்..ஏய் மோட்டார்சைக்கிள் வாலிபா..ஏய் நான்தாண்டா கண்ணாயிரம்.. என்க மோட்டார்சைக்கிள் வாலிபர்.. அப்படியா.. எங்களுக்கு தெரியலையே என்றார்.
கண்ணாயிரத்துக்கு அழுகை அழுகையாக வந்தது. டேய்..எனக்கு உங்களை நல்லாத் தெரியுதடா..உங்களுக்கு என்னைத் தெரியலையா என்று கேட்டார்.
அதற்கு மோட்டார் சைக்கிள் வாலிபர், ஆவிக்கு மத்தவங்களை அடையாளம் தெரியும்.. மத்தவங்களால ஆவியை அடையாளம் காணமுடியாது.. கண்ணாயிரம்..என்றார்.
இதில் கோபம் அடைந்த கண்ணாயிரம், ஏய் நான் பானையை தலையில் மூடியிருக்கிறதாலே.. என் முகம் உங்களுக்குத் தெரியல.. மத்தப்படி நான்தாண்டா கண்ணாயிரம் என்க மோட்டார்சைக்கிள் வாலிபரோ..முகத்தைக்காட்டினால்தான் நம்புவோம் என்றார். கண்ணாயிரம்.. ஏய், தலையிலிருந்து பானையைக் கழற்ற முடியலைடா என்க மோட்டார்சைக்கிள் வாலிபர் அதெல்லாம் நம்பமுடியாது என்றார்.
டேய்.. நான் சொன்னா நம்ப மாட்டீங்க..நான் கீழே இறங்கி வர்ரேண்டா என்க அருவாஅமாவாசை.. அய்யோ ஆபத்து, ஏணியைத் தூக்குங்கடா.. கீழே இறங்கிவந்திடப் போறான்.. பந்தாடிருவான் என்க, கண்ணாயிரம் நண்பர்கள் உஷாராகி.. ஆமா.. ஆமா.. ஏணியைத் தூக்குங்க என்றபடி மச்சில் சாய்த்துவைத்திருந்த ஏணியைத் தூக்கினர்.கண்ணாயிரம்..அய்யோ..ஏணியைத் தூக்காதீங்கடா.. தூக்காதீங்கடா என்று எவ்வளவோ கத்திப் பார்த்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
கண்ணாயிரம்..நீ ஆவிதானே பறந்துவா என்று சொல்லி சிரித்தனர். கண்ணாயிரம்..என்னடா. ஆவி ஆவி ன்னு சொல்லுறீங்க.. நான் மனுசண்டா..என்னை நம்புங்கடா என்றார்.
அதற்கு அவர்கள்.. ஏமாத்துறான்.. ஏமாத்துறான் என்றனர்.
கண்ணாயிரம்..ஏய் ஏமாத்தலைடா..ஏணியை வையுங்கடா..நான் இறங்கணும்டா என்று சொல்ல..அருவாஅமாவாசையோ.. ம் முடியாது.. நான் உன் காதை கடிச்சதுக்காக என் காதை பூனை வடிவில் ஆவியாக வந்து என் காதை கடிச்சிட்ட இப்போ கழுத்தை நெரிக்க கீழே வர்ரேங்கிற..உன்னைவிட மாட்டேன் என்று பற்களைக் கடித்தார்.
அப்போது ,மோட்டார்சைக்கிள் வாலிபர், ஏங்க.. கண்ணாயிரம் பாடி முக்கியம்..பாடி எங்கேன்னு கேளுங்க என்றார்.
உடனே அருவாஅமாவாசை.. ஏய்.. நீதான் கண்ணாயிரம் என்று சொல்லி ஏமாத்தாத.. பாடியை எங்கே என்று கேட்டார்.
கண்ணாயிரம் எந்த பாடி என்று கேட்க.. அருவாஅமாவாசை நாக்கை கடித்தபடி.. கண்ணாயிரம் பாடி என்றார்.
கண்ணாயிரம்.. உடனே, என்ன பாடியா எனக்கு தெரியாது.. என்று சொல்ல, அருவாஅமாவாசை.. ஏய் படுவா பொய் சொல்லாத, பூங்கொடிக்கிட்டக் கேட்டேன்.. மச்சில டிரங் பெட்டியிலே இருக்கு என்றாளே.. நீ பொய் சொல்லுறீய.. என்று மடக்க.. கண்ணாயிரம்.. அந்தப் பாடியா.. அது எதுக்கு என்று கேட்டார்.
அதற்கு அருவாஅமாவாசை ஏய் அந்தக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.. பாடி இருக்கா.. இல்லையா என்று அதட்டினார்.

கண்ணாயிரம்..இருக்கு..ஆனா இல்லை என்க அருவாஅமாவாசை கோபமாக, ஏய் ஏமாத்தப்பாக்கிறீயா.. தொலைச்சிடுவேன் என்றார்
கண்ணாயிரம் ..ம்.. நான் தொலையமாட்டேன்.. இங்கேத்தான் இருப்பேன் என்க, அருவாஅமாவாசையோ, ஏய்.. கதைவிடாதே.. பாடி கிடைக்குமா..கிடைக்காதா சொல்லு என்று கேட்க , கண்ணாயிரம் ஏணி வருமா, வராதா என்று கேட்டார்.
அருவாஅமாவாசையோ, நீ முதல்ல பாடியைக் கொடு.. அப்புறம் ஏணியை வைக்கிறோம் என்றார்.
கண்ணாயிரம்.. பாடிதானே தூக்கி வீசுறன்.. பிடிச்சிக்கிடுங்க.. என்க.. அருவாஅமாவாசையோ.. தூக்கி வீசுவியா.. உடைஞ்சிரும்டா பாத்து.. மெதுவாடா என்றார்.
கண்ணாயிரம்..அதெல்லாம் உடையாது.. பாடி எந்தக் காலத்துல உடையும்.. வயசானதிலே மூளை குழம்பிப் போச்சா என்று அதட்ட அருவாஅமாவாசை.. டேய், பொறுமையை சோதிக்காதே.. பாடியைக் கொடு என்றார்.
கண்ணாயிரமோ, ஏங்க பாடியை வாங்கிட்டு ஏணியை தரமாட்டேன்னு சொல்லக்கூடாது என்க, அருவாஅமாவாசையோ, ஏய் முதலில் பாடியைக் கொடுடா.. அப்புறம் ஏணியைத் தர்ரோம் என்றனர்.
கண்ணாயிரமும் ம்..எனக்கு வயிறு பசிக்கிடா..உங்களுக்கு தேவை பாடிதானடா.. என்றபடி டிரங்பெட்டியைத் திறந்தார். அதிலிருந்த பூங்கொடி பாடியை எடுத்து ஒரு கயிற்றில் கட்டினார்.
பின்னர், அங்கிருந்து ஏய்.. பாடி வருது.. பாடி வருது என்றபடி கயிற்றில் கட்டி வீசினார்.
அருவாஅமாவாசை மற்றும் கண்ணாயிரம் நண்பர்கள் பயத்துடன்..ஆ..என்று பார்க்க.. கண்ணாயிரம் கயிற்றில் கட்டிய பாடியை அங்கும் இங்கும் அசைக்க அருவாஅமாவாசை.. டேய் என்று கத்தியது அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.