June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது – சுப்பிரமணியசாமி சொல்கிறார்

1 min read

Modi should not become PM again – Subramaniasamy says

24.3.2024
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக கட்சி, பாமக , தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வரும் தேர்தலை சந்திக்கிறது.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்பி சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-
பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது, தெரிந்து கண்டு பதில் சொல்கிறேன்.
இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பாஜக அரசியல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விளம்பரத்தில் மட்டுமே எல்லாம் செய்து விட்டதாக பாஜக சொல்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *