June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

1 min read
Seithi Saral featured Image

Prime Minister M. K. Stalin’s reply to Prime Minister Modi

1.4.2023
பிரதமர் மோடி கட்சித் தீவி பற்றி கேள்வி எழுப்பினார். அந்தத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது இந்திரா காந்தி என்றும் அது கருணாநிதிக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1.) தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?. 2.) இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?. 3.) பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே… பதில் சொல்லுங்க மோடி” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கச்சத்தீவு விவாகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *