June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி பகுதியில் வெடிகுண்டு சோதனை

1 min read

Bomb test in Tenkasi area

8.4.2024
தென்காசியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் பேருந்து நிலையங்கள். இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பிசுரேஷ்குமார் நேரடி கண்காணிப்பில் 07.04.2024 இன்று தேன்பொத்தை, மீனாட்சிபுரம் மற்றும் வீ.கே.புதுர் பகுதிகளில் தென்காசி மற்றும் கேரளா மாநில காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *