May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

நினைவுகளை மறந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram who forgets memories/ comedy story/ Tabasukumar

8..2024
கண்ணாயிரம் உள்ளாட்சி தேர்தலுக்காக பெண்களுக்கு சேலை வாங்கிக் கொடுத்த கடன்பாக்கி நாப்பதாயிரத்தை ஜவுளக்கடைக்காரர் கேட்டபோது அவருக்கு கேசரி கொடுத்து சமாளிக்க நினைத்தார். ஆனால் அவர் மசியவில்லை. அல்வா கொடுத்துப்பார்த்தார். அப்போதும் மனம் இரங்கவில்லை. சூடாக இருக்கும் அவரது மனம் குளிர குளிர்ந்த தண்ணீர் கொடுத்துப்பாராத்தார். எனக்கே தண்ணி காட்டுறியா என்று ஜவுளிக்கடைக்காரர் குண்டக்க மண்டக்க கேட்டதால் கண்ணாயிரம் சமாளிக்க முடியாமல் அய்யய்யோ..அய்யய்யோ என்று அலறியபடி மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த ஜவுளிக்கடைக்காரர்.. அய்யய்யோ.. போயிரப்போறாரு.. தண்ணீ தெளிங்கடா.. தண்ணி தெளிங்கடா.. என் நாப்பதாயிரம் காசு என்று கத்தினார்.
உடனே மோட்டார்சைக்கிள் வாலிபர்.. பூங்கொடியிடம் தண்ணி கொடுங்க.. தண்ணி கொடுங்க குளிர்ந்த தண்ணீரா செம்பிலே கொடுங்க என்று கத்த பூங்கொடி பானையிலிருந்து குளிர்ந்த நீரை செம்பில் எடுத்துக் கொடுத்தார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர் ஓடி வந்து செம்பில் இருந்த தண்ணீரை கையால் அள்ளி முகத்தில் ஓங்கி அடித்தான். கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி.. நான் எங்கே இருக்கேன் என்க அருவாஅமாவாசை.. டேய்.. உன் வீட்டிலேதான் இருக்கேடா …எழும்புடா என்க.. கண்ணாயிரம் அவரைப் பார்த்த யார் நீங்க என்று கண்ணை உருட்டிக் கேட்டார்.
அதைப் பார்த்த ஜவுளிக்கடைக்காரர்.. என்னச்சி.. மாமனாரையே யாருன்னு கேட்கிறான்… மண்டை குழம்பிப் போச்சா..அய்யோ..என் நாப்பதாயிரம்.. என்ன ஆவது.. ஏய் கண்ணாயிரம் நான் யார் என்று தெரியுதா.. என்று கேட்டார்.
கண்ணாயிரம் கண்களை அகலவிரித்து ..ஆமா.. ரொம்ப பதட்டமா இருக்கியள நீங்க யாரு.. என்று கேட்டார்.
ஜவுளிக்கடைக்காரர்..அய்யயோ..என்னை யாருன்னு கேட்கானே.. வேற யாரையும் கேட்டா பரவாயில்லையே.. என்னையே கேட்கானே நான் என்ன செய்வேன் என்று கதற கண்ணாயிரம் அவரிடம்.. ஏன் அழுறீங்க.. நீங்க யாரிடம் கடன் வாங்கியிருக்கியளா என்று கேட்டார்.
ஜவுளிக்கடைக்காரர்.. ஏய் நான் கடன் வாங்கலடா.. நான்தான் கடன் கொடுத்திருக்கேன் என்க.. கண்ணாயிரம்.. அப்படியா..அப்ப மறந்திருங்க என்று சொல்ல..
ஜவுளிக்கடைக்காரர்.. அய்யய்யோ..மறக்கச் சொல்லுறானே.. நான் என்ன சொல்வேன்..என்று படப்படத்தார்.
கண்ணாயிரத்திடம்..ஏய் நாப்பதாயிரம் நினைவிருக்கா என்று கேட்டபோது கண்ணாயிரம்.. அதுவா.. முப்பதாயிரத்துக்குப்பிறகு நாப்பதாயிரம் வருமே அதுதானே என்றார்.
ஜவுளிக்கடைக்காரர்.. ஏய்.. நாசமாப் போச்சு..எனக்குத் தரவேண்டிய நாப்பதாயிரம் நினைவிருக்கா.. என்று கண்களை கசக்க, கண்ணாயிரம்.. எந்த நாப்பதாயிரம் என்று மடக்க, ஜவுளிக்கடைக்காரர்.. அதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு சேலை வாங்கிக் கொடுத்த நாப்பதாயிரம்.. கொஞ்சம் நினைவுபடுத்திப்பாரு என்று கெஞ்சினார்.
கண்ணாயிரம்..ம்….நினைவில்லையே.. என்க.. ஜவுளிக்கடைக்காரர்..அடேய்..அடேய்..நல்லா நினைவுபடுத்திப் பாரு..கைவிட்டுறாதே.. இன்னா தண்ணி குடி..எங்கே எல்லாரும் சுத்தி நிக்காதீங்க.
காத்துவரட்டும் என்று பரபரப்புடன் சொன்னார்.

கண்ணாயிரம் சோடா..சோடா..என்க ஜவுளிக்கடைக்காரர்..மோட்டார்சைக்கிள் வாலிபரிடம்.. ஏய் சூடா சோடா வாங்கிட்டுவா..ஆ.. தப்பா சொல்லிட்டேன்..கூலா சோடா வாங்கிட்டு வா என்று அதட்ட,அவன் வேகமாக கடைக்கு ஓடினான்.
ஜவுளிக்கடைக்காரர், ஏம்பா..நான் என்ன சொல்லிட்டேன்.. இப்படி புசுக்குன்னு மயங்கிவிழுந்துட்ட.. வழக்கமா நீ குண்டக்க மண்டக்க பேசுவே..அதுபோல நான் பேசுனேன்.. அது தப்பா.. என்று கேட்டார்.
கண்ணாயிரம் அவரிடம்..ரொம்ப நேரம் பேசுறீங்கள..நீங்க யாரு சொல்லவே இல்லை.. என்க..ஜவுளிக்கடைக்காரர் டென்சனாகி.. ஏய்.. நான்தான் ஜவுளிக்கடைக்காரர்.. என்று சொல்ல கண்ணாயிரம்.. அப்படியா.. நீங்க வெளியூரா.. என்க.. ஜவுளிக்கடைக்காரர்.. ஏய் கடுப்பை ஏத்தாதே.. நான் வெளியூர் இல்லை.. இந்த ஊர்தான் .. என்னை நல்லா பாரு.. என்றார்.
கண்ணாயிரம் அவரை உற்றுப் பார்த்துவிட்டு, உங்களை என் தெருவிலே பாக்கவே இல்லையே.. என்க.. ஜவுளிக்கடைக்காரர்.. அய்யய்யோ.. பாக்கலைன்னு சொல்லுறாரே.. நான் என்ன பண்ணுவேன் என்று கதறினார்.
அருவாஅமாவாசையும்.. ஏங்க தெரியலைன்னு சொன்னாவிடுங்க.. நீங்க கேட்ட நாப்பதாயிரத்திலே மாப்பிள்ளைக்கு பழைய நினைவே மறந்து போச்சு போலிருக்குது.. இனி அதைக் கேட்காதீங்க என்றார்.
ஜவுளிக்கடைக்காரர் எப்படிய்யா கேட்காம இருக்க முடியும்.. நாப்பதாயிரம் ஆச்சே.. என்று சொல்ல, அருவாஅமாவாசை.. நாப்பதா.. பாத்துக்குவம் என்க.. ஜவுளிக்கடைக்காரர்,.. நாப்பதாயிரம் ..சுருக்கிச் சொல்லாதீங்க.. பக்..பக் என்று இருக்கு என்றார்.
அருவாஅமாவாசையும் புரியுது புரியுது.. நான் ஒரு பஞ்சாயத்துக்குப் போய் பேசினாலே.. நாப்பதை வாங்கி உங்கக் கிட்ட தூக்கிவீசிடுவேன் என்றார்.
ஜவுளிக்டைக்காரர்.. நாப்பதாயிரம்.. நாப்பதுன்னு சொல்லாதீங்க.. பிறகு சுருங்கி சுருங்கி நாப்பதாகிடும்..என்றார்.
கண்ணாயிரம்..மெல்ல..என்ன எல்லாம் கூட்டமா வந்திருக்கீங்க.. ஏதாவது விசேஷமா என்று கேட்க, பூங்கொடி..அய்யய்யோ பஸ் விபத்திலே தலைகீழா உருண்டுவிழுந்ததில் மூளை இடமாறிட்டா? தெரியலையே என்று அழ, ஜவுளிக்கடைக்காரர், அய்யய்யோ.. இது வேறய்யா.. என் பணம் வருமா வராதா தெரியலையே என்று சிணுங்கினார்.
கண்ணாயிரம்..என்ன பிரச்சினை..ஏதாவது பணத்தை தொலைச்சிட்டாரா.. இன்ஸ்பெக்டருக்கிட்ட சொல்லுங்க.. என்க.. ஜவுளிக்கடைக்காரர்.. ஏய், என் வயிறு எரியுதுடா என்று சொல்ல, மோட்டார் சைக்கிள் வாலிபர் சோடாவுடன் அங்கு வந்தான்.
கண்ணாயிரம்..சோடாவா..கூலா இருக்கா கொண்டா என்று சொல்ல ஜவுளிக்கடைக்காரர், ஏய் என் வயிறுதான் எரியுதடா என்று சொல்லியபடி சோடாவை வாங்கி திறந்து கடகடவென்று குடித்துவிட்டு.. உவாவ் என்று ஏப்பம் விட்டார்.

கண்ணாயிரம்.. நல்லா இருக்கா..சோடா.. வயிறு எரியுறது நின்னுட்டா.. எனக்கு தலை குழம்புன மாதிரி இருக்கு.. அதுக்கு என்ன குடிக்கலாம் என்று ஜவுளிக்கடைக்காரரிடம் கேட்க, அய்யோ எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு.. என்றபடி ஜவுளிக்கடைக்காரர், அங்கிருந்து ஓடினார்.
கண்ணாயிரம் அவரைப் பார்த்து..வெயில் அதிகமாயிட்டு வயிறு கலக்கிட்டுப் போல.. உங்க யாருக்கும் வயிறு கலக்கவில்லையா..என்று கேட்க, இன்ஸ்பெக்டரும் அருவாஅமாவாசையும் பற்களை கடித்தபடி நின்றனர்.
-வே .தபசுக்குமார்
புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.