குற்றாலம் கோவிலில் சித்திரை விசுத்திருவிழாதேரோட்டம்
1 min read
Chitra festival at Courtalam temple Chariot
10.4.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றால நாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை விசுத் திருவிழாவை முன்னிட்டு நான்கு தேர்கள் பங்கேற்ற தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 5 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவில் நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது.அப்போது சிவ பூதகன வாத்தியங்கள் இசைக்க ப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலில் விநாயகர், முருகர், குற்றாலநாதர், குழல்வாய்மொழிஅம்பாள் ஆகிய 4 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் தங்கம், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், அகஸ்தியர் சன்மார்க்கம் முத்துக்குமாரசாமி, திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் குற்றாலம் துரை(எ) என்ற இராமையா குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா சுரேஷ், ஜெய்சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், பாஜக ஊடகப் பிரிவு செயலாளர் செந்தூர் பாண்டியன், திருமுருகன், திருக்கோவில் பணியாளர்கள் ராஜசேதுபதி, சுப்பிரமணியன், அழகுராஜேஸ்வரி, ஜெயராணி, குற்றாலம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் காவையா பாண்டியன், செயலாளர் அம்பலவாணன், பொருளாளர் வேல்ராஜ், ஆட்டோ சரவணன், உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதனைத் தொடர்ந்து 11 ம் தேதி நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும் 12-ம தேதி காலை 10 மணிக்கு சித்திரை சபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவர் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது 14ஆம் தேதி காலை 10:20 மணிக்கு மேல் சித்திரை விசு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்