May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக கலாசாரம், மொழி என்னை ஈர்த்துள்ளது: ராகுல் காந்தி பேச்சு

1 min read

Tamil Nadu culture, language attracts me: Rahul Gandhi speech

12.4.2024

‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லைக்கு வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் ராகுல் காந்தி வந்திறங்கினார்.

நெகிழ்ந்து போன தொண்டர்கள்: அங்கிருந்து கார் மூலம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பாளையங்கோட்டை நெல்லை – திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூட மைதானத்துக்கு சென்றார். அப்போது ராகுலை வரவேற்க சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் திரண்டு நின்றனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாரே ராகுல் காந்தி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி தொண்டர்களிடம் கை குலுக்கினார். இதைப்பார்த்த தொண்டர்கள் நெகிழ்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.


நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.
எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது. எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.

தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

இந்தியாவில் உள்ள மற்ற எந்த மொழிகளை விட தமிழ் ஒன்றும் குறைந்தது இல்லை. தமிழ் என்பது மொழி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை.

தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே பார்க்கிறேன்.

மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம்.

அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.

பிரதமர் மோடி மீனவர்களை மறந்துவிட்டார். விவசாயிகளைப் போல மீனவர்களும் முக்கியமானவர்களே.

உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.