June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தாய், மனைவி, 3 பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த போதை ஆசாமி

1 min read

A drug addict killed his mother, wife and 3 children and committed suicide

11.5.2024
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ல பிளாஹாபூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுராக் சிங் (வயது 42). இவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை போதை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன் காரணமாக அனுராக் சிங் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனுராக் சிங், தனது தாய் சாவித்ரியை (65) சுட்டுக் கொன்ற பின்னர், மனைவி பிரியங்காவை (40) சுத்தியலால் தாக்கி கொன்றுள்ளார். தொடர்ந்து ஆத்திரம் குறையாத அனுராக், தனது மூன்று குழந்தைகளான ஆஸ்வி (12), ஆர்னா (8), ஆத்விக் (4) ஆகியோரை வீட்டின் மாடியிலிருந்து கீழே வீசி கொன்றுள்ளார். அதன்பிறகு அனுராக் சிங் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிளாஹாபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அனுராக் சிங் வீட்டு முன்பு திரண்டனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *