June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் குறும்பலாப்பேரி நடராசனார் சாலை திறப்பு விழா

1 min read

Inauguration of Kurumpalapperi Natarasanar Road at Pavoorchatra

7.5.2024
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், குறும்பலாப்பேரி சி.நடராசனார் பெயர் தாங்கிய சாலையினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குறும்பலாப்பேரியை சேர்ந்த முன்னாள் நெல்லை மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.ந.இளங்கோவின் தந்தையுமான சி.நடராசனாரின் பெயர் தாங்கிய சாலை திறப்பு விழா பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இரா.சாக்ரடீஸ் வரவேற்று பேசினார்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் கலந்து கொண்டு, சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா.செல்லத்துரை, தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன், கீழப்பாவூர் பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் காலசாமி, கடையநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ்,ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திர பாண்டியன்,ஸ்டீபன் சத்யராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.ந.இளங்கோ நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *