June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே எஸ்.பி. சிஐடி வெட்டிக் கொலை

1 min read

near Sankarankoil S.B. CIT murder

8/5/2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியில் கோவை காவல்துறையில் எஸ்.பி. சிஐடி யாக பணியாற்றும் இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்துரை என்பவரது மகன் பெரியதுரை (வயது 30) இவர் கோவையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சிஐடி யாக பணிபுரிந்து வருகிறார். .
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று அதிகாலை சொந்த ஊருக்கு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலரால் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பெரியதுரையை வெட்டி படுகொலை செய்துவிட்டு அந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அவ்வழியாக சென்ற நபர்கள் பெரியதுரை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினர் பெரியதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெரியதுரையின் உடலைக் கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்…

விடுமுறை நாளுக்கு சொந்த ஊர் வந்த இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் பி சி ஐ டி யாக பணி புரியும் பெரியதுரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரப்பரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து பெரியதுதுரையின் உறவினர்கள் சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *