தென்காசியில் ராகுல்காந்தி பிறந்தநாளில் பிறந்த 11 குழந்தை களுக்கு தங்க மோதிரம்
1 min read
Gold rings for 11 children born on Rahul Gandhi’s birthday in Tenkasi
20.6.2024
காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா அன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தங்க மோதிரம் அணிவித்தார்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியும் நகர்மன்ற உறுப்பினருமான பூமாதேவி தலைமையில் காலை 9.30 மணியளவில் தென்காசி எல் ஆர்எஸ் பாளையத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றப்பட்டது. அதனைத், தொடர்ந்து மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மதியம் 12 மணியளவில் தென்காசி காய்கறி மார்க்கெட் அருகே தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோதிடர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனி நாடார் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஊத்துமலை முரளி ராஜா, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், காங்கிரஸ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் யூனியன் சேர்மன் சீவநல்லூர் .ப.சட்டநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் கே.பி.சங்கரகுமார், வழக்கறிஞர் சங்கை கணேசன், பொதுச் செயலாளர் சந்தோஷ் ஜார்ஜ், தேவேந்திரன், முன்னாள் தென்காசி நகர காங்கிரஸ் தலைவரும் தென்காசி நகர்மன்ற உறுப்பினருமான அ.காதர்மைதீன், பொருளாளர் ஈஸ்வரன், தேவராஜன், ஆறுமுகம், பீர் முகமது, சேட், சபர் முருகேசன், சுடலையாண்டி, காதர் முஸ்தபா, கணேசன், பெரு மாள், சுப்பிரமணியன், முருகன், இராமச்சந்திரன், பரமசி வன், ஆறுமுகம், டேவிட் ராஜா மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.