June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ.க. நிர்வாகி அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

1 min read

BJP Administrator Alexis Sudhakar arrested under the Prevention of Gangster Act

5.7.2024
செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன்பாக போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் அலெக்சிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *