August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆம்ஸ்ட்ராங்கொலை: சென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்

1 min read

Armstrong Murder: Chennai Police Commissioner transferred

8.7.2024
சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையின் 110-வது போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *