June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

1 min read

Panchayat Council Leaders’ Federation Consultative Meeting in Tenkasi

8.9.2024
தென்காசியில் 221 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன்
தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்
பெரியபிள்ளைவலசை ஊராட்சி மன்றத்தலைவர் பொறியாளர் க.இ.வேலுச்சாமி, செயலாளர் மடத்துப்பட்டி செய்யது இப்ராகிம், வீரபாண்டியன், அழகுதுரை, பொருளாளர் அன்புராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, ராணிப் பேட்டை, மயிலாடுதுறை, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அவர்கள் இதுவரை 3 ஆண்டுகள் பதவி வகித்து வந்த நிலையில் மற்ற மாவட்டங் களில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு இந்த வருடத்துடன் 5 ஆண்டு கால பதவி காலம் முடிவடையுள்ளது. இந்நிலை யில் தமிழக முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் ஐந்து ஆண்டுகள் முழுமையாக மக்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் தென்காசி நெல்லை உள்ளிட்ட 9 மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் வருகிற 2026 அக்டோபர் மாதம் வரை 5 ஆண்டுகள் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்றங் களில் 1 வது கணக்கில் போதிய நிதி இல்லாத ஊராட்சிகளுக்கு மக்களின் அடிப்படைத்தேவைகளை செய்து கொடுப்பதற்கு குறைந்தபட்ச நிதியாக ரூபாய் 5 லட்சம் வரவு வைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியகூட்டமைப்பு
நிர்வாகிகள் அய்யனார்குளம் நீதிராஜன், வடக்குபுதூர் வேலுச்சாமி, நெல்கட்டும்செவல் பாண்டியராஜன், போக நல்லூர் குரு சண்முகப் பிரியா, அழகாபுரி கணேசன், கிளாங்காடு கொ.சந்திரசேகர், இரவண சமுத்திரம் முகம்மதுஉசேன், அறியப்பபுரம் தினேஷ்குமார், நடுவக்குறிச்சி முத்துப்பாண்டியன், நடுவக்குறிச்சி மைனர் சிவாஆனந்த், பலன் கோட்டை ராஜேந்திரன், சேந்தமங்கலம் விசுவாசம், சத்திரப்பட்டி அய்யலுசாமி, மடத்துப்பட்டி செய்யது இப்ராஹிம், நயினாரகரம் முத்தையா முதலியார், நக்கலமுத்துப்பட்டி குணசேகரன், இனாம் கோவில்பட்டி சமுத்திரம், வயலி கருணாநிதி, கீழக்கடையம் பூமிநாத், மாறாந்தை மீனா சுப்பிரமணியன், ராஜபாண்டி முருகன், ஏபிஎன் நாடாரூர் அழகுதுரை, கீழக்கலங்கல் சந்திரசேகர், குலசேகரப்பட்டி முத்துமாலையம்மாள், கருவந்தா டேனியல், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தப்பேரி டி.கே.பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *