June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிப்பூரில் மக்களுக்கு ஆறுதல் கூறி, ராகுல் காந்தி குறைகளை கேட்டறிந்தார்

1 min read

Rahul Gandhi listens to the grievances of the people in Manipur

8.7.2024
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இதில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற சூழல் நிலவுகிறது.
வன்முறை காரணமாக பலர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் அசாம் மாநிலத்திற்கு சென்றார்.
அசாம் மாநிலத்தின் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு தங்க வைக்கப்பட்டவர்கைளை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து மணிப்பூர் சென்றார்.

மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்ட உயர்நிலை பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள முகாமில் தங்கியிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

வன்முறை காலக்கட்டத்தில் ஏற்கனவே இரண்டு முறை மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி தற்போது எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல் முறையாக மணிப்பூர் சென்றுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *