கல்லிடைக்குறிச்சியில் ரெயிலை நிறுத்தாததால் எஞ்சின் டிரைவர்கள் 2 பேர் சஸ்பென்ட்டு
1 min read
2 engine drivers were suspended for not stopping the train at Kallidaikurichi
9.7.2024
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் அந்த ரயில் எஞ்சின் டிரைவர்கள் இரண்டு பேர்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே மாலை 7 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நெல்லையிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் 28ம் தேதி வரை இயக்கப்படுகிறது.. இந்த ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்
இதே போல மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண். 06029 மேட்டுப்பாளையத்தில் இருந்து 8.7.2024 முதல் 29.7.2024 கிழமைகளில் மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக் குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, கோவை, பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட நிலையில் கல்லிடைக்குறிச்சி ரயில்நிலையத்தில் நிற்காமல் வந்துவிட்டதால் அங்கு இந்த ரயிலுக்காக 55 க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தநிலையில் அவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். ரயிலில் லோகோ பைலட்டாக பணியாற்றிய நபர் இந்த ரூட்டிற்கு புதியவராக இருந்த காரணத்தினால் நிறுத்தங்களுக் கான மேப்பை கவனிக்காமல் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தாமல் வந்துள்ளார். இதனால் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்ததாலும் ரயில் டிரைவர்கள் அஜாக்கிரதை காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததால் ரயில்வே துறை அதிகாரிகள் கல்லிடைக்குறிச்சியில் காத்திருந்த பயணிகள் தென்காசிக்கு வரும் வரை ரயில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக தென்காசி ரயில் நிலையத்தில் 9 மணிக்கு புறப்படவேண்டிய திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் நிறுத்தி வைக்கப்பட்டு ஈரோடு ரயிலில் கல்லிடைக்குறிச்சி ரயில்நிலையத் திலிருந்த பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள் தென்காசி ரயில் நிலையத்திற்கு வந்து திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ரயிலில் 10.30 மணியளவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் கால தாமதத்தோடு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலை நிறுத்தாத காரணத்தினால் அந்த ரயிலில் பணிபுரிந்த எஞ்சின் டிரைவர்கள் விஷ்ணு, மூத்த உதவி டிரைவர் சண்முக வேலாயுதம் ஆகியோரை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.