தென்காசி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 815 மனுக்கள்
1 min read
815 petitions in Tenkasi People’s Grievance Redressal Day meeting
9.7.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடை பெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 815 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 06 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3.500/- வீதம் ரூ.21,000/- மதிப்பிலான செயற்கை கால்ளையும், இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 நபர்களுக்கு தலா ரூ.17,000/- வீதம் ரூ.255,000/- க்கான நிதியுதவியினையும், கடந்த திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்த வீரகேரளம்புதூர் தாலுகா அகரம் கிராம ஊராட்சியை சேர்ந்த 1 பயனாளிக்கு ரூ.45,000/-க்கான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் ரூ.3.21000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 815 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) அமிர்தலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், உதவி ஆணையர் (கலால்) இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார். துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயுப் வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.