தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்-செல்வ பெருந்தகை பங்கேற்பு
1 min read
Tenkasi district Congress workers meeting. State President Selvaperunthakai participated
தென்காசியில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனிநாடார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ.ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் செங்கோட்டை. ராம்மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்,ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தவே தமிழகம் முழுவதும் இது போன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியே இருக்காது என மோடி பிரசாரத்தில் பேசும் போது தெரிவித்தார். ஆனால் இன்றோ பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தினறுகின்றனர். தமிழகத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தமிழகம் புதுச்சேரியில் நாம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் புது ரத்தம் பாய்ச்சப்படும். 50 சதவீத இளைஞர்களுக்கு கட்சியில் முன்னுரிமை வழங்கப்படும். கட்சிக்காக உழைப்போருக்கு பொறுப்புகள் தானாக தேடி வரும். மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தி;ற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆந்திரா , பீகாருக:கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசத்தை பாதுகாக்க தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் பாத யாத்திரை நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத், முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.
கே.ரவி அருணன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கொடிக்குறிச்சி முத்தையா, எஸ் கே டி பி காமராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் சீவநல்லூர் ப.சட்டநாதன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள் ஆனந்த பவன் காதர் மைதீன், சுப்பிரமணியன், ரபீக், மஞ்சுளா, பொருளாளர் ஈஸ்வரர் மகிளா காங்கிரஸ் தலைவி பூமாதேவி, கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், தென்காசி மாவட்ட மனித உரிமைத்துறை தலைவர் ராஜாராம், மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குற்றாலம் பெருமாள் செங்கோட்டை கதிரவன், மத்தளம் பாறை ஜேம்ஸ், கீழப்பாவூர் நகர தலைவர் சிங்ககுட்டி (எ) குமரேசன், , கோவிந்தப்பேரி டி கே பாண்டியன் மாநில பேச்சாளர்கள் ஆலடிசங்கரையா, எஸ்.ஆர். பால்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் கடையம் மாரிக்குமார், ராதாகுமாரி, மேரி, பேரூராட்சி கவுன்சிலர் அன்பழகு சின்னராஜா, செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ராமர், மாவட்ட ஐடி பிரிவு பொதுச்செயலாளர் ராஜீவ் காந்தி, தென்காசி சந்தோஷ் ஜார்ஜ், பிரபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்
ஜி.மாடசாமி ஜோதிடர் அனைவருக்கும் நன்றி கூறினார்.