பாவூர்சத்திரம்: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
1 min read
Bhavoorchatram: AIADMK protest against electricity tariff hike
25/7/2024
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும் நியாய விலை கடைகளில் வழங்கி வரும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்தும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே ஆர் பி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முகசுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். செல்வ மோகன் தாஸ் பாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக
தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இணை செயலாளர் முத்துலட்சுமி, துணைச் செயலாளர் பசுவதி பொருளாளர் சாமிநாத பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், கசமுத்து, மாவட்ட சார்பு அணி செயலாளர் சந்திரகலா, தளபதி பிரேம்குமார் நெல்லை முகிலன், டாக்டர் கிருஷ்ணசாமி, குத்தாலிங்கம், சுப்பையா எ ராஜு, ஒன்றிய கழகச் செயலாளர்கள் சங்கர பாண்டியன் அமல்ராஜ், இருளப்பன், அருவேல் ராஜன், முருகேசன், சுப்பிரமணியன், நகரக் கழகச் செயலாளர்கள் தென்காசி சுடலை, சுரண்டை சக்திவேல் பேரூர் கழகச் செயலாளர்கள் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன், மேலகரம் வழக்கறிஞர் கார்த்திக் குமார்சுந்தரபாண்டியபுரம் முத்துராஜன், சுப்பிரமணியன் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கர், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் குணம், பாலமுருகன் காதர், சேர்மபாண்டி, தமிழ் எ ராமசாமி, பாலமுருகன், வெள்ளப்பாண்டி, குத்தாலிங்கம், ஐவராஜா எ அருள்பாண்டி, சாமி ஆசாரி, ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் ஜெயகுமார், சங்கர், கருப்பசாமி பாண்டியன், ஜமால், மணி, முத்துக்குமாரசாமி, மைமூன்பீவி, ரமேஷ், சாமிநாதன், அகமதுஷா, ஸ்டீல் மாரியப்பன், ஓய் ஜி மாரியப்பன், ஊத்துமலை இளைய ஜமீன்தார் குமரேசன், டேனி அருள்சிங் , விவேகானந்தர், கவிதா, சின்னதம்பி , போஸ் பாண்டியன், கணேசன், நிஷா, செல்வம், கடையம் மாரியப்பன், வடிவேல், முருகன், தமிழ்மணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றாலம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் தங்கபாண்டியன், உமாமகேஸ்வரன், புவனா, சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ரவி, தர்மசீலன், ஜெகன், சங்கர், வினிஷ்குமார், மணிகண்டன், கண்ணன், செல்வகுமார், வேல்சுரேஷ், செல்வம் , ஆரோக்கியசாமி, நிக்சன், அருண்குமார், சந்தோஷ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை மாரிமுத்து குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.