June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பசியில்லா தமிழகம் அமைப்புக்கு சிறப்பு விருது-தைமூர் துணை பிரதமர் வழங்கினார்.

1 min read

Deputy Prime Minister Timur presented a special award to the organization “Hungerless Tamil Nadu”

25/7/2024
தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களிலிருந்து பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானா அசானமி சாவினோ கலந்துகொண்டு பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள், பள்ளி முதல்வர்கள், மருத்துவர்கள், காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், காவல்துறை அதிகாரிகள், இசைக்கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட 100 பேர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு மறுவாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும் பசியில்லா தமிழகம் குழுவினருக்கு தமிழகத்தின் சிறந்த பெண் சமூக ஆர்வலர்களுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் கணவன் மனைவி இருவரும் இணைந்து சமூகப் பணிகளை செய்வது குறித்து மேடையில் சமூக ஆர்வலர் வெங்காயம்பட்டி பூ.திருமாறன் விரிவாக எடுத்துரைத்தார். அதற்கு தைமூர் துணை பிரதமர் மேடையிலேயே கைகளை கொடுத்து பசியில்லா தமிழகம் அறக்கட்டளை தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீராம் கிராண்ட் இன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பீஸ் பல்கலைக்கழக இந்திய ஆலோசகர் ஐசக் பாஸ்கர் தலைமை தாங்கினார். காமன் வெல்த் மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் ஜெயலால் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஆபிரகாம் முன்னிலை வகித்தனர்.

தைமூர் நாட்டு துணை பிரதமரின் மனைவி கேண்டிடா சீமந்தியரியா நமது பாரம்பரிய படி குத்து விளக்கேற்றினார். சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி பூ. திருமாறன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

துவக்க உரையை தைமூர் நாட்டு பீஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய இயக்குனர் டாக்டர். ஐசலின் பாஸ்கர் ஆற்றினார். விழாவின் சிறப்புரையை தைமூர் துணை பிரதமர் மரியானா அசானமி சாவினோ ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை சுருக்கமாக டாக்டர் ஐசக் பாஸ்கர் பேசினார்.

இந்த விழாவில் கலந்து கொண்டவர்களை உன் பாஸ் பல்கலைக்கழக இந்திய இயக்குனர் டாக்டர் ராஜா தங்கப்பன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். துணை பிரதமர் மனைவிக்கு சாந்தி திருமாறன் பொன்னாடை அணிவித்தார். தைமூர் துணை பிரதமருக்கும் அவரது துணைவியாருக்கும் டாக்டர் ஐசலின் பாஸ்கர் நினைவு பரிசுகள் வழங்கினார்.

விழாவின் இறுதியில் பத்திரிக்கையாளர்களை துணை பிரதமர் அவர்கள் சந்தித்து பேசினார். முன்னதாக பாளை விக்னேஷியஸ் பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற “போதை இல்லா பாதையில் நெல்லை” என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை திமோர் துணை பிரதமர் துவங்கி வைத்தார். துணை பிரதமர் பாதுகாப்பு படை அதிகாரிகள் திமோரிலிருந்து வந்திருந்தனர். திருநெல்வேலி கமிஷனர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஐசக் பாஸ்கர் ஆபிரகாம், ஐசாலின் பாஸ்கர் டாக்டர் ஏகலைவன் மற்றும் வெங்கடம்பட்டி பூ.திருமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *