செங்கோட்டை ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – ஆட்சியர் பங்கேற்பு
1 min read
Chief Minister Program Camp with People in Red Fort Union – Collector Participation
25.7.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கட்டளை குடியிருப்பு சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கட்டளை குடியிருப்பு சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
அரசின் சேவைகள் விரைவாகவும். எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும். மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
மக்களுடன் முகாம் என்ற இப் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித் துறை. ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை. எரிசக்தி துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவை திட்டங்களை மக்கள் உடனடியாக பயன் பெறும் வகையில் முகாமில் கோரிக்கை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசுத்துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும். தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மேலும், (25.07.2024) அன்று ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர். மாறாந்தை, சிவலார்குளம், மாயமான் குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு நல்லூர் சமுதாய நலக்கூடத்திலும் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர். வீராசமுத்திரம். இரவண சமுத்திரம், மந்தியூர் ஆகிய ஊராட்சிகளுக்கு இரவண சமுத்திரம் அக்ரஹார மேலரத வீதி சங்கரி திருமண மஹாலிலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இடைகால், நயினாரகரம், ஊர்மேலழகியான், கொடிக்குறிச்சி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு நயினாரகரம் சமுதாய நலக்கூடத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அனைவரும் மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்தார்.
இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.