June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் சாவு

1 min read

Rameswaram fisherman killed in collision with Sri Lanka Navy patrol boat

1.8.2024
ராமேஸ்வரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது. விசைப்படகு மூழ்கி உயிரிழந்த மீனவர் உடல் மீட்கப்பட்டது. மாயமான மீனவரை தேடும் இலங்கை கடற்படை, ராமேஸ்வம் மீனவர் இருவரை கைது செய்தனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை 31 ல் 397 விசைப்படகுகள் தொழிலுக்குச் சென்றன. அன்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவரை கைது செய்ய முயன்றனர்.
ராமேஸ்வரம் கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது. இதில் விசைப்படகு நடுக் கடலில் மூழ்கியது.
இதில் படகிலிருந்த மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகியோர் மாயகினர். இதில் மலைச்சாமியின் உடல் மீட்கப்பட்டு நெடுந்தீவு கடற்கரை கொண்டு செல்லப்பட்டது.
கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராமச்சந்திரனை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். படகில் இருந்த மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய இருவரை மீட்டு காங்கேசன்துறை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உறவினர்கள், மாயமான மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன் திரண்டனர். தனுஷ்கோடி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களின் உறவினர்கள், சக மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடுக்கடலில் மாயமான மீனவரை தேடும் பணியில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தள ஹெலிகாப்டர், இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் சர்வதேச கடல் எல்லை பகுதியில்; ஈடுபடுத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *